மும்பையில் சுயேட்சை எம்.பி தற்கொலை செய்து கொண்ட வழக்கு - சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

Mar 9 2021 4:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

மும்பை ஹோட்டலில் சடலமாக மீட்கப்பட்ட சுயேட்சை எம்.பி Mohan Delkar மரணம் குறித்த வழக்கை விசாரிக்க, சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலம் ஹவேலி மக்களவை தொகுதி சுயேச்சை எம்.பியான திரு.மோகன் தெல்கர், கடந்த 22-ம் தேதி மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மோகன் தெல்கர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர். மேலும் அவர் தற்கொலை செய்துகொண்ட ஹோட்டலில் இருந்து, 15 பக்க தற்கொலை கடிதம் கிடைத்தாகவும், அதில் தனது இறப்புக்கு காரணமானவர்களின் பெயர்களை அவர் குறிப்பிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. ஏற்கனவே தன்னை சிலர் துன்புறுத்துவதாக மோகன் தெல்கர், பிரதமர் திரு.மோடிக்கும், உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷாவுக்கும் கடிதம் எழுதியிருந்தார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், மோகன் தெல்கர் மரணம் தொடர்பான வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றை அமைக்கப்பட்டுள்ளதாக, மகாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் திரு.அனில் தேஷ்முக், சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00