கொரோனா பாதிப்பால் கடைகளுக்‍கு நேரில் செல்வதை தவிர்த்த மக்‍கள் - பண்டிகை காலத்தில் 54 ஆயிரம் கோடி ரூபாய்க்‍கு ஆன்லைனில் பொருட்கள் விற்பனை

Nov 28 2020 11:06AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் அக்‍டோபர், நவம்பர் மாத பண்டிகை காலங்களில் மட்டும், ஆன்லைன் சந்தைகளில் 54 ஆயிரம் கோடி ரூபாய்க்‍கு விற்பனை நடந்துள்ளது.

கடந்த அக்‍டோபர் 10-ம் தேதி தொடங்கி நவம்பர் நடுப்பகுதி வரையிலான ஒரு மாத பண்டிகை காலத்தில், ஆன்லைன் விற்பனை, எதிர்ப்பார்த்ததைவிட 20 சதவீதம் அதிகரித்ததாக, ஆன்லைன் சந்தையை கண்காணிக்‍கும் ரெட்ஸீர் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக, பெரிய கடைகளுக்‍கு நேரில் சென்று பொருட்களை வாங்க மக்‍கள் ஆர்வம் காட்டாததால், ஆன்லைன் விற்பனை உயர்ந்ததாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இந்த விற்பனையில், 10 ஆர்டர்களில் 4 ஆர்டர்கள், முதல் முறையாக ஆன்லைன் பயன்படுத்துவோரிடமிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி விற்பனையில், ஃபிளிப்கார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்கள் மட்டும், ஆன்லைன் சந்தை மொத்த விற்பனையில் 88 சதவீதத்தை எட்டின என்பது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00