கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் உடலில், 3 முதல் 5 மாதங்கள் மட்டுமே நோய் எதிர்ப்புச்சக்‍தி இருக்‍கும் - மீண்டும் பாதிக்‍க வாய்ப்புள்ளதாக ஐ.சி.எம்.ஆர். எச்சரிக்‍கை

Oct 21 2020 4:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் உடலில், 3 முதல் 5 மாதங்கள் மட்டுமே நோய் எதிர்ப்புச்சக்‍தி இருக்‍கும் என்றும், எனவே, அவர்களுக்‍கு மீண்டும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், ஐ.சி.எம்.ஆர். எச்சரித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி வந்துவிட்டால் மீண்டும் தொற்று ஏற்படாது என்று பொதுமக்‍கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது. ஆனால், கொரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்டவர் உடலில் அதற்கான நோய் எதிர்ப்புச்சக்தி 3 மாதங்கள் மட்டுமே இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேட்டியளித்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்‍குநர் திரு. பல்ராம் பார்க்கவா, கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் மீண்டும் தொற்றுக்‍கு ஆளாவது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதுவரை நடைபெற்ற ஆய்வுகளின் தரவுகளின்படி, கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்தபட்சம் 3 மாதங்கள் வரையிலும், அதிகபட்சம் 5 மாதங்கள் வரை மட்டுமே இருக்‍கும் என கண்டுபிடிக்‍கப்பட்டுள்ளதாக கூறினார். 90 நாட்களுக்‍கு பின்னர் நோய் எதிர்ப்பு சக்‍தி குறையும்போது, மீண்டும் கொரானா தொற்றால் பாதிக்‍கப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார். எனவே, மக்‍கள் அனைவரும் தொடர்ந்து முகக்கவசம் அணிவதுடன், சமூக விலகலைக் கடைபிடிப்பது அவசியம் என்று​திரு. பல்ராம் பார்க்கவா வலியுறுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00