கர்நாடக மாநில இடைத்தேர்தல் பிரச்சாரம் - காங்கிரஸ் தொண்டர்கள் மீது பா.ஜ.க.வினர் கொலைவெறித் தாக்‍குதல் - சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு

Oct 21 2020 3:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடகாவில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் மீது பா.ஜ.க.வினர் தாக்‍குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம்​பெங்களூருவில் உள்ள ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் தும்கூரு மாவட்டத்தில் உள்ள சீரா ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்‍கு, வரும் நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில், காங்கிரஸ் சார்பில், மறைந்த ஐ.பி.எஸ். அதிகாரி ரவியின் மனைவி குஸ்மா போட்டியிடுகிறார். காங்கிரஸிலிருந்து பாஜகவில் இணைந்த முனி ரத்தினா, குஸ்மாவை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், குஸ்மாவுக்‍கு ஆதரவு கேட்டு காங்கிரஸ் தொண்டர்கள், ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில் வாக்‍கு சேகரித்தனர். அப்போது, அங்கு வந்த பா.ஜ.க முன்னாள் கவுன்சிலர் வேலுநாயக்‍ தலைமையிலான பா.ஜ.க.வினர், தாக்குதல் நடத்தினர். இது, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வேலு நாயக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00