மத்திய அரசின் தோல்விகள் அனைத்தையும் மூடி மறைத்த பிரதமர் - நரேந்திர மோதியின் தொலைக்‍காட்சி உரைக்‍கு காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா கண்டனம்

Oct 21 2020 12:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தடுப்பு நடவடிக்‍கைகளில் மத்திய அரசின் தோல்விகளை மூடி மறைத்துவிட்டதாக, பிரதமர் திரு. நரேந்திர மோதியின் தொலைக்‍காட்சி உரைக்‍கு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் திரு. சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொலைக்‍காட்சி மூலம் நாட்டு மக்‍களுக்‍கு உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோதி, கொரோனா முற்றிலும் ஒழிந்து விட்டதாக யாரும் கருத வேண்டாம் என்றும், பண்டிகைக் ‍காலம் என்பதால் பொதுமக்‍கள் கூடுதல் கவனத்துடன் இருக்‍க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்நிலையில், பிரதமர் திரு. மோதி உரைக்‍கு காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான திரு. சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் காரணமாக நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கு மத்திய அரசு இதுவரை என்ன செய்துள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார். இனியாவது என்ன செய்யப்போகிறது என்பது குறித்து பிரதமர் திரு. மோதி நாட்டு மக்களுக்கு விளக்கி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மக்களுக்கு அறிவுரை கூறுவதன் மூலம், மத்திய அரசின் தோல்விகளை பிரதமர் திரு. மோதி மூடிமறைத்துவிட்டார் என்றும், கொரோனா பாதிப்பு அதிகரிக்க மக்களின் அலட்சியம் காரணம் அல்ல என்றும், மத்திய-மாநில அரசுகளின் தோல்வியே இதற்கு காரணம் என்றும், இதற்காக நாட்டு மக்களிடம் பிரதமர் திரு. மோதி மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்றும் திரு. சித்தராமையா குறிப்பிட்டுள்ளார். கொரோனா நெருக்கடி காலத்தில் மத்திய அரசு அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பு நிதி உதவி, யார்-யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், பிரதமரின் கேர்ஸ் நிதிக்கு வந்த நிதி எவ்வளவு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00