மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி எதிரொலி - முதலீட்டாளர்களுக்கு இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு

Aug 4 2020 4:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்த மாதத்தின் முதல் வா்த்தக தினமான நேற்று, பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சியடைந்ததால், முதலீட்டாளர்களுக்‍கு ஒன்று புள்ளி இரண்டு பூஜ்ஜியம் லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியது முதல் தேசிய பங்குச் சந்தை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்தவாரத்தின் முதல் வா்த்தக தினமான நேற்று, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 667.29 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 173.60 புள்ளிகள் குறைந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்‍கு இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் முதலீடுகளை வாபஸ் பெறுவதும், கொரோனா தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருவதாலும் முதலீட்டாளா்கள் கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளனர் என பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. வங்கி, வங்கி அல்லாத நிதிநிறுவனப் பங்குகள் மிகப்பெரும் இழப்பை சந்தித்தன. மெட்டல், பார்மா பங்குகள் மட்டுமே ஓரளவு தாக்குப் பிடித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00