கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து, 2021ம் ஆண்டு வரை சாத்தியமில்லை - நாடாளுமன்ற நிலைக்‍ குழுவுக்கு சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அனுப்பிய அறிக்‍கையில் தகவல்

Jul 11 2020 11:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து, வரும் 2021ம் ஆண்டு வரை சாத்தியமில்லை என, நாடாளுமன்ற நிலை குழுவுக்கு, சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அனுப்பிய அறிக்‍கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், உயிர் தொழில் நுட்பவியல் துறை, அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆய்வுத் துறை, அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆய்வு கவுன்சில் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் மற்றும் அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் திரு. கே. விஜயராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின்னர், நாடாளுமன்ற நிலைக்‍ குழுவிடம் அளிக்‍கப்பட்ட அறிக்‍கையில், இந்தியாவில் தயாரான கொரோனா நோய் தடுப்பு மருந்துகளை, மனிதர்களிடையே சோதனை செய்யும் முதல் முயற்சி வரும் திங்கட்கிழமை முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்துகள், வரும் 2021ம் ஆண்டுக்கு முன்வரை பெரிய அளவில் பயன்படுத்துவதற்கு சாத்தியமில்லை என அந்த அறிக்‍கையில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00