சீனாவுடனான எல்லைப் பிரச்சனையில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி மகிழ்ச்சியுடன் இல்லை - அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கருத்து

May 29 2020 11:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவுடனான எல்லைப் பிரச்சனையில், இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோதி மகிழ்ச்சியுடன் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்திய - சீன எல்லைகளான சிக்கிம், லடாக் ஆகிய பகுதிகளில், சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால், இந்தியா - சீனா இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில், இரு நாடுகளுக்கிடையே மத்தியஸ்தம் செய்யத் ‌தயாராக இருப்பதாக, அண்மையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்திய - சீன எல்லை விவகாரம் குறித்து, வெள்ளை மாளி‌கையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், இந்தியா - சீனா இடையே மிகப்பெரிய மோதல் நடைபெற்று கொண்டிருப்பதாகவும், இரண்டு நாடுகளுமே வலிமைமிக்க ராணுவத்தை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எல்லை விவகாரத்தில், இரண்டு நாடுகளுமே மகிழ்ச்சியாக இல்லை என்றுக் குறிப்பிட்ட ட்ரம்ப், இது தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம் பேசிய போது, அவர் மகிழ்ச்சியுடன் காணப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00