டெல்லி தப்லிக் ஜமாத் மாநாடு தொடர்பான வழக்‍கு - 83 வெளிநாட்டவர் மீது 20 குற்றப்பத்திரிகைகளை தாக்‍கல் செய்தது குற்றப்பிரிவு போலீஸ்

May 26 2020 6:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட 83 வெளிநாட்டினர் மீது, 20 குற்றப்பத்திரிக்‍கைகள் தாக்‍கல் செய்யப்பட்டுள்ளன.

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில், கடந்த மார்ச் மாதம் மாநாடு நடைபெற்றது. இதில் வெளிநாட்டினர் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இவர்களில், சரியான ஆவணங்கள் மற்றும் அனுமதியின்றி இந்தியாவில் நடைபெற்ற மாநாட்டில் ஏராளமான வெளிநாட்டினர் கலந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இந்த மாநாட்டில் பங்கேற்ற பெரும்பாலானோருக்கு, கொரோனா உறு‌தி செய்யப்பட்டதால், அந்த அமைப்பின் தலைவர் திரு. மவுலானா சாத் கந்தால்வி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தப்லிக் ஜமாத் மாநாட்டில் அனுமதியின்றி, சட்ட விரோதமாக கலந்துகொண்டதாக 83 வெளிநாட்டினர் மீது, குற்றப்பத்திரிக்‍கைகள் தாக்‍கல் செய்யப்பட்டுள்ளன. கிழக்‍கு டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார், 20 குற்றப்பத்திரிக்‍கைகளை தாக்‍கல் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00