புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கடைகள் திறப்பு - நீண்ட வரிசையில் காத்திருந்து மது பாட்டில்களை வாங்கி சென்ற மதுப்பிரியர்கள்

May 25 2020 11:13AM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் மதுக்‍ கடைகள் திறக்‍கப்பட்டன. நீண்ட வரிசையில் நின்று மதுப்பாட்டில்களை மதுப்பிரியர்கள் வாங்கி செல்கின்றனர்.

புதுச்சேரியில் மூடப்பட்டிருந்த ஒவ்வொரு மதுக்கடைகளையும் அதிகாரிகள் இன்று திறந்ததை அடுத்து விற்பனை தொடங்கப்பட்டது. காலை 10 மணியிலிருந்து மாலை 7 மணி வரை கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மது பாட்டில்களை வாங்க மதுப்பிரியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

முகக்‍கவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள், புதுச்சேரியில் மதுபானங்கள் வாங்க அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானங்கள் மீது உயர்த்தப்பட்ட வரிகள் 3 மாதங்களுக்‍கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் மீது 25 சதவீத கொரோனா வரி விதிக்‍கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் மதுபானங்கள் மீது 25 சதவீதமும், சாராயத்துக்கு 20 சதவீதமும் கொரோனா வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00