கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக எந்த சமூகத்தினர் மீதும் குற்றம் சாட்டக்‍கூடாது - மத்திய அரசு அறிவுறுத்தல்

Apr 9 2020 2:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் பரவல் குறித்து எந்தவொரு சமூகத்தின் மீதும் குற்றம் சாட்டக்‍கூடாது என பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சக இணையதளத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்‍கையில், கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணம் என எந்த சமுதாயம் மீதோ, எந்த ஒரு பகுதி மக்‍கள் மீதோ ​குறை கூறக்‍கூடாது என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் தவறான கண்ணோட்டத்துடன் செய்திகள் பரப்பப்படுவதாகவும் சுட்டிக்‍காட்டப்பட்டுள்ளது.

இதுபோன்ற செயல்கள் தேவையற்ற சமூக பதற்றத்துக்கு வழிவகுத்து விடும் எனவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. எனவே, பாரபட்ச அணுகுமுறைகளை தடுப்பது இப்போது அவசர தேவையாகும் - சுகாதார விழிப்புணர்வு பெற்ற ஒரே சமுதாயமாக அனைவரும் நிற்க வேண்டும் -

கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், போலீசார் ஆகியோர் மூலம் கொரோனா பரவும் என்ற அச்சத்தில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல் வந்துள்ளதையும் மத்திய அரசு சுட்டிக்‍காட்டியுள்ளது.

அவர்கள் அனைவரும் மக்‍களுக்‍கு உதவவே பணியாற்றி வருகிறார்கள் என்பதால், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது என்றும், அவர்களை பாரபட்சமாக நடத்தக்கூடாது என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கி குணமடைந்தவர்களை பாரபட்சமாக நடத்துவதை தவிர்க்‍க வேண்டும் என்றும் மத்திய அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்‍கையில் கேட்டுக்‍ கொண்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00