மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ராமாயணம் மறு ஒளிபரப்பு - ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் ஹேஷ்டேகுகள்
Mar 28 2020 2:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில், ராமாயணம் தொடரின் மறு ஒளிபரப்பு இன்று தொடங்கியுள்ள நிலையில், Ramayan என்ற ஹேஷ்டேக், ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
கொரோனா அச்சுறுத்தலையடுத்து, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனிடையே, கடந்த 1980-களின் இறுதியில், தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற ராமாயணம் தொடர், பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று முதல் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தினமும் காலை 9 முதல் 10 மணி வரை, ஒரு அத்யாயமும், இரவு 9 முதல் 10 மணி வரை ஒரு அத்யாயமும் ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ராமாயணம் தொடரின் மறு ஒளிபரப்பு, தூர்தர்ஷனில் இன்று காலை தொடங்கியது. இதையடுத்து, Ramayan, Thanks PM, Thanks DD போன்ற ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்டிங்க ஆகி உள்ளன.