அமெரிக்‍க அதிபர் டிரம்பின் வருகைக்‍காக செய்யப்படும் ஏற்பாடுகள் இந்தியர்களின் அடிமை மனநிலையை காட்டுவதாக சிவசேனா கடும் விமர்சனம்

Feb 17 2020 3:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவில் அரசு முறைப்பயணம் மேற்கெள்கிறார். டிரம்பிற்கு, மறக்‍க முடியாத வரவேற்பு அளிக்‍கப்படும் என பிரதமர் திரு. மோதி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில், 3 மணி நேரம் பங்கேற்கவுள்ள டிரம்பை வரவேற்பதற்காக, அம்மாநில அரசும், மத்திய அரசும், சுமார் 100 கோடி ரூபாயில் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, அஹமதாபாத்தில், புதிய சாலைகள் அமைக்‍கப்பட்டு வருவதுடன், குடிசை பகுதிகளை மறைக்‍க, 7 அடி உயரத்திற்கு சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசின் இந்த ஏற்பாடுகளை சிவசேனா கடுமையாக சாடியுள்ளது. சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில், டிரம்பின் வருகைக்‍காக செய்யப்படும் ஏற்பாடுகள், இந்தியர்களின் அடிமை மனநிலையை காட்டுவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணத்தில் இப்படிப்பட்ட ஏற்பாடுகள் தேவையா என்றும், இதற்கு, அமெரிக்கா, கடனுதவி எதுவும் வழங்கப்போகிறதா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00