குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து 10 வரிகள் பேச முடியுமா? : ராகுல் காந்திக்கு பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா சவால்

Jan 18 2020 12:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து, 10 வரிகள் பேச முடியுமா என்று, காங்கிரஸ் எம்.பி., திரு. ராகுல் காந்திக்கு, பாஜக செயல் தலைவர் திரு.ஜே.பி.நட்டா, சவால் விடுத்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, நாடு முழுவதும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ‍பேசிய, பாஜக செயல் தலைவர் திரு.ஜே.பி.நட்டா, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தெரியாம‍லேயே, காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதாகவும், இந்த சட்டம் பற்றி, 10 வரிகள் பேசும்படி, ராகுல் காந்திக்கு சவால் விடுப்பதாகவும் தெரிவித்தார். குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில், நாட்டு மக்களை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவறாக வழி நடத்துவதாகக் குற்றஞ்சாட்டிய ஜே.பி.நட்டா, இந்த சட்டத்தின் மூலம், லட்சக்கணக்கான மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி, குடியுரிமை வழங்கி உள்ளதாகவும், இந்த சட்டத்தை எதிர்ப்பவர்கள், நாட்டை பலவீனமாக்கிக் கொண்டிருப்பதாகவும் சாடினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00