பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராகிறார் ஜே.பி.நட்டா : ஜனவரி 20-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்

Jan 18 2020 1:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாஜக தேசிய தலைவராக, அக்கட்சியின் செயல் தலைவர் திரு. ஜே.பி.நட்டா, வரும் 20-ம் தேதி ‍தேர்வு செய்யப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாஜக தேசிய தலைவராக உள்ள திரு. அமித்ஷா, கடந்த 4 ஆண்டுகளாக அப்பதவியில் இருந்து வருகிறார். அவரது பதவிக் காலம் கடந்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடைந்தது. இருப்பினும், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் காரணமாக, தேர்தல் முடியும் வரை, அவரே தலைவராக தொடர்ந்தார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சராகப் அமித்ஷா பொறுப்பேற்றார். இதையடுத்து, அக்கட்சியின் செயல் தலைவராக, திரு.ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டார். இந்நிலையில், பாஜக தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு ‍‌தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. ஒருவேளை ஒன்றுக்கு மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தால், 21-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தி, புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவர். ஆனால், பாஜக தேசிய தலைவருக்கான தேர்தலில், செயல் தலைவர் ஜே.பி.நட்டா மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்வார் என்றும், இதன் மூலம், அவர், போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00