மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி யாகுப் மெனனுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை

Jun 2 2014 12:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி யாகுப் மெனனுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.

மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு தீவிரவாதிகள் நிகழ்த்திய தொடர் குண்டுவெடிப்பில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தொடர் குண்டுவெடிப்பினை தாவூத் இப்ராஹிம், டைகர் மேனன் உள்ளிட்டோர் சதித்திட்டம் தீட்டி நிகழ்த்தியதாக சி.பி.ஐ. விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள தாவூத் இப்ராஹிம், டைகர் மேனன் ஆகியோர் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியும் டைகர்மேனனின் சகோதரனுமான யாகுப் மெனனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி யாகுப் மெனன் தாக்கல் செய்திருந்த கருணை மனுவை குடியரசுத் தலைவர் அண்மையில் நிராகரித்தார். இந்நிலையில், தனது தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி யாகுப் மெனன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்செய்யப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தூக்கு தண்டனைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00