கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பெயர் பட்டியலை அனுப்பியது மத்திய அரசு - கேரள ஆளுநர் பதவியை ராஜனாமா செய்தார் ஷீலா தீட்ஷித்

Aug 26 2014 5:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை குடியரசுத் தலைவர் மாளிகை விரைவில் வெளியிடவுள்ளது. இதனிடையே, கேரள ஆளுநர் திருமதி. ஷீலா தீட்ஷித் இன்று பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், பாரதிய ஜனதா மூத்த தலைவருமான திரு.கல்யாண் சிங், ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் சட்டப்பேரவை சபாநாயகரான திரு.வாஜூபாய் ருதாபாய் வாலா கர்நாடக ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்தியில் முந்தைய வாஜ்பாய் அரசில் அமைச்சராக இருந்த திரு.C.வித்யாசாகர் ராவ் மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரபல எழுத்தாளரும், பாரதிய ஜனதா மகளிர் அணியின் முன்னாள் தலைவருமான மிருதுளா சின்ஹா கோவா ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். புதிய ஆளுநர்களின் பெயர்கள் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிர ஆளுநராக இருந்த திரு.சங்கர நாராயணன் மிசோரம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டத்தை எதிர்த்து ராஜினாமா செய்ததால், அப்பதவி காலியாக இருந்தது. கர்நாடகத்தில் ஆளுநராக இருந்த திரு.H.R. பரத்வாஜ் கடந்த ஜூலை மாதம் தனது பதவிக்காலத்தை பூர்த்தி செய்ததையடுத்து, அந்தப் பதவியும், ராஜஸ்தான் ஆளுநராக இருந்த திருமதி.மார்க்கரெட் ஆல்வாவின் பதவிக்காலம் முடிவடைந்ததால் அப்பதவியும் காலியாக இருந்தன. கோவா ஆளுநராக இருந்த திரு.B.V.வாஞ்சு, கடந்த மாதம் பதவி விலகியதை அடுத்து, அந்த மாநிலத்தில் ஆளுநர் பதவி காலியாக இருந்தது. காலியாக உள்ள 4 மாநில ஆளுநர் பதவிகளுக்கு தற்போது புதிய நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் குடியரசுத் தலைவரை சந்தித்து பேசிய கேரள ஆளுநர் திருமதி. ஷீலா தீட்ஷித் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00