இந்திய கடற்படைத் தலைமை தளபதியாக ஆர்.கே. தோவான் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு - மூத்த துணைத் தளபதி சேகர் சின்ஹா பதவி விலக முடிவு செய்துள்ளதாக தகவல்

Apr 18 2014 3:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய கடற்படைத் தலைமை தளபதியாக ஆர்.கே. தோவான் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மூத்த துணைத் தளபதி சேகர் சின்ஹா பதவி விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பையில் நீர்மூழ்கி கப்பல்களில் அடுத்தடுத்து நடந்த விபத்துகளுக்கு பொறுப்பேற்று கடற்படைத் தளபதி ஜோஷி பதவி விலகியதையடுத்து, அப்பதவிக்கு தோவான் நியமிக்கப்பட்டார். தோவான் நியமனத்தில் பணிமூப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், தோவானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மூத்த துணைத் தளபதி சேகர் சின்ஹா பதவி விலகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடற்படையின் மூத்த துணைத் தளபதியும், மேற்கு மண்டல கமாண்டருமான சேகர் சின்ஹா, தோவானைவிட 6 மாதங்கள் பணி மூப்பு பெற்றுள்ளபோதும் அவரை பின்னுக்கு தள்ளி நியமனம் ந‌டைபெற்றுள்ளதாக தெரிகிறது. இதனால், கடும் அதிருப்தி அடைந்துள்ள சின்ஹா உடனடியாக விருப்ப ஓய்வில் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு அனுமதி கிடைக்காவிடில் பதவி விலக தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் 4-வது பெரிய கடற்படையான இந்திய கடற்படையின் தளபதி நியமனத்தில் சர்ச்சை வெடித்திருப்பது பாதுகாப்புத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00