மஹாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் - தொகுதிப் பங்கீட்டில் சுமூக முடிவை ஏற்படுத்த பாரதிய ஜனதா - சிவசேனா கட்சிகள் முயற்சி

Sep 20 2014 3:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

மஹாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், பாரதிய ஜனதா - சிவசேனா கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ளது.

மஹாராஷ்டிரா சட்டப்பேரவையில் உள்ள 288 இடங்களுக்கு, வரும் 15-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. பாரதிய ஜனதா - சிவசேனா கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், பாரதிய ஜனதா புதிய தொகுதிப் பங்கீடு திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக, இருக்கட்சிகளிடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. பாரதிய ஜனதாவின் புதிய தொகுதிப் பங்கீடு திட்டம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும், பாரதிய ஜனதா 130 இடங்களிலும், சிவசேனா 140 இடங்களிலும் போட்டியிடுவது என்றும், எஞ்சியுள்ள இடங்களை கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கு பகிர்ந்தளிப்பது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவசேனா கட்சி, தனக்கு 169 இடங்கள் வேண்டும் என்றும், பாரதிய ஜனதாவுக்கு 119 இடங்களை ஒதுக்குவதாகவும் கூறியிருந்ததால் இருக்கட்சிகளிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00