டெல்லியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு - மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Nov 1 2014 6:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் இடைத்தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், 1984-ம் ஆண்டு கலவரத்தால் பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதையொட்டி, தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லி சட்டப்பேரவையில் காலியாகவுள்ள கிருஷ்ணாநகர், மெஹ்ரோலி மற்றும் துக்ளகாபாத் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து, தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், 1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி கொல்லப்பட்டதையடுத்து, ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்த சீக்கியர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால், விளக்கம் கோரி தேர்தல் ஆணையம், உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் 3-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள இழப்பீடு மொத்தம் 3,325 குடும்பங்களுக்கு விரைவில் வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் அரசுக்கு 166 கோடி ரூபாய் செலவு பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00