தென் சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து வி.பி. கலைராஜன் நீக்கம் : அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமைக் கழகம் அறிவிப்பு

Mar 21 2019 12:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென் சென்னை வடக்‍கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து திரு. வி.பி. கலைராஜன் நீக்‍கப்படுவதாக, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக தலைமைக்‍ கழகம் அறிவித்துள்ளது.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக தலைமைக்‍ கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழகத்தின் கொள்கை குறிக்‍கோள்களுக்‍கும், கோட்பாடுகளுக்‍கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக்‍ கட்டுப்பாட்டை மீறி, கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும், தென்சென்னை வடக்‍கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. வி.பி. கலைராஜன் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்றுமுதல் நீக்‍கி வைக்‍கப்படுவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்‍ கொள்ளக்‍ கூடாது என அறிவிக்‍கப்பட்டுள்ளது.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக தலைமைக்‍ கழகம் இன்று வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், தென் சென்னை வடக்‍கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் பொறுப்பில் திரு. வி.சுகுமார் பாபு நியமிக்‍கப்படுவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்‍கப்பட்டுள்ள தென்சென்னை வடக்‍கு மாவட்டக்‍ கழகச் செயலாளருக்‍கு கழக உடன் பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்‍ கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00