வேலூர் தேர்தல் பிரச்சாரத்தின் போது விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக புகார் -தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்‍குப்பதிவு

Aug 2 2019 12:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

வேலூர் தேர்தல் பிரச்சாரத்தின் போது விதிமுறைகளை மீறி ஆதரவு திரட்டிய புகாரில் தி.மு.க தலைவர் திரு. மு.க ஸ்டாலின், வேட்பாளர் திரு. கதிர் ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்‍கு தொடரப்பட்டுள்ளது.

வேலூர் மக்‍களவை தேர்தலுக்‍காக பிரச்சாரம் மேற்கொண்ட தி.மு.க தலைவர் திரு. மு.க ஸ்டாலின் ஆம்பூர் பகுதியில் தனியார் தோல் காலணி தொழிற்சாலையில் ஊழியர்களிடம் ஆதரவு திரட்டினார். பஜார் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய இஸ்லாமிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இந்த கூட்டத்திற்கு தேர்தல் ஆணையத்திடம் இருந்து அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்று பார்வையிட்ட தேர்தல் அதிகாரிகள், அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியதற்காக மண்டபத்தை சீல் வைத்தனர்.

தேர்தல் விதிமுறை மீறல் புகார் தொடர்பாக திரு. மு.க ஸ்டாலின், வேட்பாளர் திரு. கதிர் ஆனந்த், உட்பட 4 பேர் மீது ஆம்பூர் நகரக்‍ காவல் துறையினர் வழக்‍கு பதிவு செய்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00