கஜா புயலால் சேதமான வீடுகள் மற்றும் படகுகளுக்கு நிவாரணம் வழங்காத எடப்பாடி அரசு - அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள், மீனவர்கள் வாக்குவாதம்

Feb 19 2019 12:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

கஜா புயலால் சேதமான வீடுகளுக்கும், படகுகளுக்கும் நிவாரணம் வழங்காத அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக நிவாரணம் வழங்கவில்லை என்றால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மீனவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

கஜா புயலினால் நாகை மாவட்டம் பூவைத் தேடி என்ற கிராமம் அதிக பாதிப்பை சந்தித்தது. இந்நிலையில் சேதமடைந்த மீனவர்களின் படகுகளுக்கும், விவசாயிகளின் வீடுகளுக்கும் தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகை மூன்று மாதங்களாகியும் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பூவைத்தேடி கிராமத்தை சேர்ந்த விவசாயிகளும், மீனவர்களும் எடப்பாடி பழனிச்சாமி அரசை கண்டித்து ஒப்பாரி போராட்டம் அறிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் அதிகாரிகளும் போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆத்திரமடைந்த மீனவர்களும், விவசாயிகளும் ஒரு கட்டத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து ஆவேசப்பட்ட மக்களை போலீசார் அமைதிப்படுத்தினர். நிவாரண தொகையை எடப்பாடி அரசு உடனடியாக வழங்கவில்லை என்றால், வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00