நடிகர் ஜெயம் ரவியின் சைரன் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியீடு? : வரும் 26ம் தேதி சைரன் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்
Jan 11 2024 4:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடிகர் ஜெயம் ரவியின் சைரன் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்தாண்டு நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அகிலன், இறைவன் ஆகிய 2 திரைப்படங்களும் அடுத்தடுத்டு தோல்வியை சந்தித்தன. தற்போது, புதுமுக இயக்குநர் ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் சைரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, யோகிபாபு, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம், கடந்த மாதம் வெளியாக இருந்த நிலையில், சலார் திரைப்படத்தின் வெளியீட்டால் தள்ளி போனாதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வரும் 26ம் தேதி வெளியீட உள்ளதாக கூறப்படுகிறது.