இந்திய தேர்தல் ஆணையத்தால் அ.ம.மு.க. முறைப்படி பதிவு - தமிழகம் முழுவதும் கழகத்தினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Dec 8 2019 11:27AM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.ம.மு.க., பதிவு ‍செய்யப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் மேற்கொண்ட தொடர் முயற்சிகள் காரணமாக, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தால், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன்படி, சென்னையில் உள்ள கழக தலைமை அலுவலகம் முன்பு, தென் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் விருகை திரு. கண்ணன் தலைமையில், கழகத்தினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர்.

இதே போல், செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், ஆலந்தூர் பகுதி கழக செயலாளர் திரு.லட்சுமிபதி தலைமையில், நங்கநல்லூரில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கழகத்தினர் கொண்டாடினர். செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. மா. கரிகாலன், மாவட்ட மகளிரணி செயலாளர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தென்சென்னை தெற்கு மாவட்டம், சைதை பகுதி கழகச் செயலாளர் கோட்டூர்புரம் திரு.G. கந்தன் தலைமையில் சின்னமலை அருகே கழகத்தினர் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பொதுமக்‍களுக்‍கு இனிப்புகள் வழங்கப்பட்டன. தென்சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் விருகை திரு.T.S. கண்ணன், கழக அமைப்பு செயலாளர் திருவான்மியூர் திரு.S.முருகன், சைதை பகுதி எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் திரு. சாரதி உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00