அ.ம.மு.க. சார்பில் ஆலோசனைக் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல், கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றம்

Nov 22 2019 5:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அம்மா மக்‍கள் முன்னேற்ற கழக கூட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம் சங்கராபுரம் ஒன்றிய கழக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் கள்ளக்‍குறிச்சியில் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.கோமுகி மணியன் தலைமையில் நடைபெற்ற இக்‍கூட்டத்தில், சங்கராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்தும், கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்‍கை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்‍கூட்டத்தின்போது, திமுக, பா.ம.க கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், அக்கட்சிகளில் இருந்து விலகி கழகத்தில் இணைந்தனர். அவர்களுக்‍கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.கோமுகி முனியன், பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

மதுரை மாநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட கழக செயலாளர் திரு. ஷ.ராஜலிங்கம் தலைமையில், உள்ளாட்சி தேர்தல் குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கழக தலைமை நிலைய செயலாளர் திரு. கே.கே.உமாதேவன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் திரு. எஸ்.மாரியப்பன் கென்னடி, கழக எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் திரு. கா.டேவிட் அண்ணாதுரை, கழக மகளிர் அணி செயலாளர் திருமதி. வளர்மதி ஜெபராஜ், எம்ஜிஆர் மன்ற செயலாளர் திரு. பரமநாதன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00