சென்னை ஐ.ஐ.டி மாணவி தற்கொலை விவகாரத்தில் பேராசிரியர் மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும் - அனைத்திந்திய மாணவர் பெருமன்ற அமைப்பினர், ஐஐடி-யை முற்றுகையிட்டு போராட்டம்

Nov 15 2019 1:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை ஐ.ஐ.டியில் தற்கொலை செய்துகொண்ட மாணவி பாத்திமா இறப்பிற்கு நீதி கேட்டும், பேராசிரியர் மீது கொலை வழக்கு பதிவு செய்யக்கோரியும் அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு பயின்று வந்த, கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி, கடந்த 9-ம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தற்கொலைக்கு இணை பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன்தான் காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், உதவி பேராசிரியர் ஹேமசந்திரன் கரா, இணை பேராசிரியர் மில்லிந்த் பிராமே ஆகியோரது பெயரையும் தற்கொலை குறிப்பில் மாணவி பாத்திமா லத்தீப் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில், மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், மாணவி பாத்திமா இறப்பிற்கு நீதி கேட்டும், பேராசிரியர் மீது கொலை வழக்கு பதிவு செய்யக்கோரியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில், ஐஐடி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. முற்றுகையில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர், நிர்வாகத்தைக்‍ கண்டித்து கண்டன முழக்கமிட்டனர், தற்கொலைக்கு காரணமான பேராசிரியர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஐ.ஐ.டி. வளாகம் அருகே போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்றவர்கள், மாணவி பாத்திமா மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். தொடர் போராட்டங்கள் காரணமாக ஐ.ஐ.டி வளாகம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதிக்‍கப்படவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00