அ.தி.மு.க. விதிகள் மாற்றப்பட்டதற்கு எதிராக வழக்‍கு - இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் கோரிக்‍கையை நிராகரித்தது டெல்லி உயர்நீதிமன்றம்

Sep 17 2019 5:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.தி.மு.க. விதிமுறைகளை மாற்றி அமைத்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்‍கை ரத்து செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்‍கிய அ.இ.அ.தி.மு.க. விதிமுறைகளை ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ். ஆகியோர் மாற்றி அமைத்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை உருவாக்‍கியுள்ளனர். இது அ.இ.அ.தி.மு.க. விதிமுறைகளுக்‍கு புறம்பானது என்றும், அந்த பதவிகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் முன்னாள் எம்.பி. கே.சி பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு தொடர்ந்திருந்தார். மேலும், பொதுச் செயலாளரை கட்சியின் விதிப்படி தொண்டர்கள் ஓட்டுப்போட்டு தேர்வு செய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்‍கை ரத்து செய்யக்‍கோரி, ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். சார்பில் மனுதாக்‍கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி திரு.சஞ்ஜிவ் சச்தேவா, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். கோரிக்‍கையை நிராகரித்தார்.

மேலும் வழக்‍கை எதிர்கொள்ள ஏன் அஞ்சுகிறீர்கள் என ஓ.பி.எஸ்-இ.பி.எஸ். வழக்‍கறிஞரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து, வழக்‍கு விசாரணையை அடுத்த மாதம் 6ம் தேதிக்‍கு ஒத்திவைத்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00