சந்திரயான்-2 விண்கலம், வரும் 7-ம் தேதி அதிகாலை, நிலவின் தென் துருவத்தில் முழுமையாக தரையிறக்கப்படும் - இஸ்ரோ மையத்திற்கு வருமாறு பிரதமர் மோடிக்‍கு சிவன் அழைப்பு

Aug 22 2019 4:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

சந்திரயான்-2 விண்கலம், வரும் 7-ம் தேதி அதிகாலை, நிலவின் தென் துருவத்தில் முழுமையாக தரையிறக்கப்படும் நிகழ்வுக்‍காக, பிரதமர் திரு. மோடிக்‍கு, இஸ்ரோ மையம் அழைப்பு விடுத்துள்ளதாக, அதன் தலைவர் திரு.சிவன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திரு. சிவன், சந்திரயான்-2 விண்கலம், நிலவை சுற்றி நீள் வட்டப்பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், இனிவரும் நாட்களில் நீள்வட்டப் பாதையை சுருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

சந்திரயான்-2, நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கும் நிகழ்வு, அடுத்த மாதம் 7ம் தேதி அதிகாலை 1.40 மணிக்கு தொடங்கி 1.55 மணிக்கு முடிவடையும் என்று தெரிவித்த திரு. சிவன், இந்த நிகழ்வுக்‍காக, பிரதமர் திரு. மோடி, இஸ்ரோ மையத்துக்‍கு வர அழைப்பு விடுக்‍கப்பட்டுள்ளதாக கூறினார்.

இனிவரும் நாட்களில் சந்திரயான்-3 உட்பட பல்வேறு திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்த உள்ளதாகவும், திறமைக்‍கே முக்‍கியத்துவம் கொடுக்‍கப்படும் என்றும், ஆண், பெண் பாகுபாடு பார்க்‍கப்படாது என்றும் திரு. சிவன் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00