பழனியில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தேர்தல் : இறுதி வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி அணியினர் கிழித்ததால் பரபரப்பு

Dec 12 2018 3:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தேர்தலின் இறுதி வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி அணியினர் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தல் வருகிற 14ம்தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் முடிந்து, வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் அலுவலகத்தின் தகவல் பலகையில் ஒட்டப்பட்டது. அப்போது, எடப்பாடி அணியைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவர் வேட்பாளர் பட்டியலை போலீசார் முன்னிலையில் கிழித்து எரிந்துவிட்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அவரை பிடிக்க முயன்ற போது, தப்பியோடினார். இதனையடுத்து பழனி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கழகத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மதுரை மேலூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டுறவு சங்க தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சனை காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுபடி தேர்தலுக்கான மனுதாக்கலின் போது மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.செ.சரவணன் தலைமையில் ஏராளமான கழகத்தினர் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து, இறுதி வேட்பாளர் பட்டியல் ஒட்டப்பட்டது. இதில் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட 22 வேட்பாளர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00