தமிழகத்தை நோக்கி வேகமாக நெருங்கி வரும் ''கஜா'' புயல் : ராமநாதபுரம் முதல் சென்னை வரையிலான கடலோர மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்புக்‍குழுவினர்

Nov 14 2018 2:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

கஜா புயல் எச்சரிக்‍கையைத் தொடர்ந்து, தமிழக கடலோர மாவட்டங்களில் பேரிடர் மீட்புக்‍ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். புயல் எதிரொலியாக நாகை மற்றும் கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்‍கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவாகியுள்ள கஜா புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்டத்திலுள்ள 683 கிராமங்கள், 16 பேரூராட்சி, ஐந்து நகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்தார். மாவட்டம் முழுவதும் உள்ள விளம்பர பலகைகள், பேனர்களை நாளை மாலைக்குள் அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார் மீனவ கிராம பஞ்சாயத்தார்களை சந்தித்த, அம்மாவட்ட ஆட்சியர் திரு.சுரேஷ்குமார் மீனவ கிராம மக்களை பாதுகாப்பான பகுதிக்குச் செல்ல அழைப்பு விடுத்தார்.

பாம்பன் மற்றும் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் தீவு பகுதிகளில் மழை நீர் தேங்கும் இடங்களில் ஆய்வு மேற்கொண் மாவட்ட ஆட்சியர் திரு.வீரராகவ ராவ், மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை. அச்சத்தை தீர்க்க அரசு முன் வரவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் 19 மீனவ கிராமங்கள் உள்ளிட்ட 170 இடங்களில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், வெள்ளத்தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அரசு அதிகாரிகள் மற்றும் முதல்நிலை தன்னார்வலர்கள் கலந்துக்கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கஜா புயல் எதிரொலியாக நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00