அமைச்சர் காமராஜ் பினாமிகள் பெயரில் சொத்துகளை குவித்துள்ள விவகாரம் - திருவாரூரில் உள்ள உறவினருக்‍குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை

Oct 16 2018 4:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூர் மாவட்டத்தில் அமைச்சர் காமராஜ் உறவினருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாக சோதனை நடத்தினர்.

தமிழக உணவுத்துறை அமைச்சராக இருக்கும், காமராஜ் மீது ஏற்கனவே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்துவரும் நிலையில் அவரது பினாமிகள் பெயரில் சொத்துகளை குவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவரது உறவினரான சேரன்குளம் மனோகரன் என்பவரது வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அவருக்குச் சொந்தமான மன்னார்குடி கீழராஜ வீதியில் உள்ள டி.எம்.ஏ. டவர், பெட்ரோல் பங்க், கம்மாளத் தெருவில் உள்ள அவரது அலுவலகம், 6ம் தெருவில் உள்ள வீடு, புதுத்தெருவில் உள்ள டி.எம்.ஏ.ஹோம் அப்ளையன்ஸ், நீடாமங்கலத்தில் உள்ள தார்சாலை அமைக்கும் பிளான்ட், திருக்‍கருகாவூர் திருமண மண்டபம் ஆகிய 7 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து சேரன்குளம் மனோகரனின் டி.எம்.ஏ.கட்டுமான நிறுவன அலுவலகத்தில் இன்று இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00