தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு, பன்றிக்‍காய்ச்சல் - ​சென்னை குன்றத்தூரில் டெங்கு காய்ச்சலுக்‍கு 2 வயது சிறுமி பலியான பரிதாபம்

Oct 16 2018 3:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில், டெங்கு, பன்றிக்‍காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், பொதுமக்‍கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். சென்னையை அடுத்த குன்றத்தூரில் டெங்கு காய்ச்சலுக்‍கு, 2 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

குன்றத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது 2 வயது மகள் சத்யஸ்ரீ, காய்ச்சல் தொடர்பாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டபோது, டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. பின்னர் சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவர்கள் போதிய சிகிச்சை அளிக்‍காததே, உயிரிழப்புக்கு காரணம் என சத்யஸ்ரீயின் பெற்றோர் மற்றும் உறவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

விழுப்புரத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்‍கப்பட்டவர்களில், 9 பேருக்‍கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மருருத்துவமனையின் முதல்வர் திரு. சங்கர நாராயணன் தெரிவித்தார். எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க உடனடியாக போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை அரசு மருத்துவக்‍ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளார். அவரது ரத்த மாதிரியில் எச்1 என்1 வைரஸ் இருப்பதற்கான அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, அவருக்‍கு தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்‍கப்பட்டு வருகிறது. 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை வலி இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலசுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00