கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு கழகத்தினர் உற்சாக வரவேற்பு : திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டுமென வேண்டுகோள்

Oct 16 2018 1:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை அவனியாபுரம் பேருந்துநிலையம் அருகே கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் சிறப்புரையாற்றிய கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளருக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

மதுரை மாநகருக்கு வருகை தந்த கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்கு விமான நிலையித்திலிருந்து காளவாசல் வரை வழிநெடுகிலும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் திரண்டு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மதுரை விமான நிலையத்தில் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை கழக கொள்கை பரப்பு செயலாளர் திரு. தங்க தமிழ்செல்வன், கழக அம்மா பேரவை செயலாளர் திரு. மாரியப்பன் கென்னடி, கழக இளைஞரணி செயலாளர் திரு.டேவிட் அண்ணாத்துரை, கழக அமைப்பு செயலாளர் திரு. மாணிக்கராஜா, விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் திரு.எதிர்கோட்டை சுப்ரமணியன், கழக மகளிரணி செயலாளர் திருமதி.வளர்மதி ஜெபராஜ், கழக மருத்துவரணி தலைவர் திரு.கதிர்காமு, கழக மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் முத்தையா, மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு. இ.மகேந்திரன், மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.மா.ஜெயபால், தெற்கு மாவட்ட செயலாளர் திரு. ஷ.ராஜலிங்கம், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.செ.சரவணன் ஆகியோர் வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து, விமானநிலைய நுழைவாயிலில் புறநகர் தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு.செல்வம் தலைமையில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். பெருங்குடி ரிங்ரோடு சந்திப்பில் புறநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு.தமிழ்ராஜா தலைமையில் ஏராளமான இளைஞர்கள் பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர்.

பெருங்குடி பகுதியில் திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் திரு. கருத்தகண்ணன் தலைமையில் பெண்கள் ஆரத்தி எடுத்தும் கையில் குக்கருடனும் வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவனியாபுரம் பேருந்துநிலையம் பகுதியில் பகுதி செயலாளர் திரு. ராமகிருஷ்ணன் தலைமையில் ஆயிரக்கணக்கான பெண்கள், இளைஞர்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் சிறப்புரையாற்றிய கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளருக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து அவனியாபுரம் பெரியார் சிலை அருகே திருப்பரங்குன்றம் பகுதி கழக செயலாளர் வீரமணி தலைமையில் ஏராளமான இளைஞர்கள் வரவேற்பு அளித்தனர்.

வில்லாபுரம் பகுதியில் கழக இளைஞரணி செயலாளர் திரு. டேவிட் அண்ணாத்துரை குடும்பத்தினர் வரவேற்பு அளித்தனர். வில்லாபுரம் ஹவுசிங்போர்டு பகுதியில் மாநகர் தெற்கு தொகுதி கழக செயலாளர்கள் திரு. பி.ராஜ்குமார், திரு.அழகுபாண்டி, திரு.மணிகண்டன் ஆகியோர் ஏற்பாட்டில் மேளதாளங்கள் முழங்க ஆயிரக்கணக்காணோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அரசரடி சந்திப்பில் மத்திய பகுதி கழகங்களின் செயலாளர்கள் திரு.சிவஜோதி, திரு. சுப்பு தலைமையில் திரு.டிடிவி தினகரணுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து மதுரை மாநகர் வடக்கு மாவட்ட பகுதி கழக செயலாளர்கள் திரு.செழியன், திரு. மாவூத்துவேலவன், திரு. டால்பின்அசோக், திரு.அசோகன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00