கிருஷ்ணகிரி நகராட்சியில் குப்பை கிடங்கால் தொற்றுநோய் பரவும் அபாயம் : சாலை ஓரங்களில் இரசாயன கழிவுகள் கொட்டப்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

Sep 24 2018 1:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிருஷ்ணகிரி நகராட்சியில் தேக்கிக்கிடக்கும், குப்பை கழிவுகளால், தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், மக்களை திரட்டி போராட‌்டம் நடத்தப்படும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கினால் தொற்றுநோய் அதிகமாக பரவி வருவதாக, வந்த தொடர் புகாரையடுத்து, திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.செங்குட்டுவன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

நகராட்சி குப்பை கிடங்கில், கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் இந்த பகுதியில் தேக்கி வைக்கப்படுகிறது. அப்போது, சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.செங்குட்டுவன், சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் மாவட்ட ஆட்சியரிடம், மனு அளித்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்த அவர், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனில், பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுடன் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தார்.

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள ஆலைகளின் இராசயன கழிவுகள் சாலை ஓரங்களில் தேங்கிக்கிடப்பதால், தொழுநோய் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அப்பகுதி தொழிலாளி ஒருவரின் கால் பாதம் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதிமக்‍களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சாலை ஓரங்களில் இரசாயன கழிவுகள் கொட்டப்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00