கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தலின்பேரில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக உறுப்பினர் சேர்க்கை முகாம் - ஆலோசனைக் கூட்டம்

Sep 24 2018 12:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவுறுத்தலின்பேரில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கழக உறுப்பினர் சேர்க்‍கை முகாம்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

கடலூர் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக வடலூர் பேரூராட்சி சார்பில் கழக வளர்ச்சிப் பணி மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்த செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், EPS, OPS அணியிலிருந்து விலகி பலர் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தருமபுரி மாவட்டக்‍ கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக தலைமை நிலைய செயலாளர் திரு பி.பழனியப்பன் கலந்துகொண்டு, கழகத்தில் புதிய உறுப்பினர்களை அதிக அளவு சேர்க்க வேண்டும், வரும் தேர்தலில் ஆற்றவேண்டிய களப்பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார். இந்தக்‍ கூட்டத்தில், மாற்றுக்‍ கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கழகத்தில் தங்களை இணைத்துக்‍கொண்டனர். கழக நிர்வாகிகள் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

திருச்சி வடக்கு மாவட்ட கழகம் சார்பில், மருங்காபுரி ஒன்றிய கழக நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கழக அமைப்பு செயலாளரும், திருச்சி வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான திரு. ஆர்.மனோகரன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர். மேலும், பொதுத்தேர்தலில் ஆற்றவேண்டிய களப்பணிகள் குறித்தும் ஆலோசிக்‍கப்பட்டது. இக்கூட்டத்தில், கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திடல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உறுப்பினர் சேர்கை முகாம் நடைபெற்றது. இந்தக்‍ கூட்டத்தில், மாற்று காட்சிகளைச் சேர்த்த ஏராளமானோர் கழகத்தில் தங்களை இணைத்துக்‍கொண்டனர். கழக அமைப்பு செயலாளரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளருமான திரு.கே.டி. பச்சைமால் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு மாவட்டம் மாத்தூரில் கொங்கு இளைஞர் பேரவை ஒன்றிய செயலாளர் கெளதம் தலைமையில் 50 பேர், அக்கட்சியில் இருந்து விலகி, மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. பருவாச்சி எஸ். பரணீதரன் முன்னிலையில் கழகத்தில் தங்களை இணைத்துக்‍கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், கழக நிர்வாகிகள் ஏராளாமானேர் பங்கேற்றனர்.

சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் இஸ்லாமிய பெருமக்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் 50க்கும் கழகத்தில் தங்களை இணைந்தனர். ஓமலூரில், மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. கே.கே. மாதேஸ்வரன் முன்னிலையில் ஓபிஎஸ்., ஈ.பி.எஸ் அணியினர் மற்றும் விஜய் மன்றத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கழகத்தில் தங்களை இணைத்துக்‍கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் பகுதிகளில் இருந்து தி.மு.க., உள்ளிட்ட மாற்று கட்சியினர் கழக பொருளாளர் திரு. எம்.ரெங்கசாமி முன்னிலையில், கழகத்தில் தங்களை இணைத்துக்‍கொண்டர்.

தஞ்சை வடக்கு மாவட்டக் கழகம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஒத்தக்கடை, துக்காச்சி, மற்றும் செம்மங்குடி ஊராட்சி பகுதிகளில் இருந்து மாற்றுக்‍ கட்சிகளைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோர் கழகத்தில் தங்களை இணைத்துக்‍கொண்டனர். கழக பொருளாளரும், தஞ்சை வடக்கு மாவட்டக் கழக செயலாளருமான திரு. எம்.ரெங்கசாமி கழகத்தில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கீழ்பென்னாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கல்லேரி, வாளவெட்டி உள்ளிட்ட கிராமங்களில் மாற்றுக்‍கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கழகத்தில் தங்களை இணைத்துக்‍கொண்டனர். அவர்களுக்‍கு தெற்கு மாவட்டக்‍ கழக செயலாளர் திரு. எஸ்.ஆர்.தருமலிங்கம் சால்வை அணிவித்து வரவேற்றார். கழக நிர்வாகிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

காஞ்சிபுரம் மத்திய மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் கழக உறுப்பினர் சேர்க்‍கை முகாம் ரத்னமங்கலத்தில் நடைபெற்றது. அனைத்து ஊராட்சிகளிலும் தீவிர உறுப்பினர் சேர்ப்பது, அளைத்து தேர்தல்களிலும் ஆற்றவேண்டிய களப்பணிகள் குறித்தும் ஆலோசிக்‍கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் திரு.எம் கோதண்டபாணி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் இந்த முகாமில் கலந்து​கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமாண் மேற்கு ஒன்றியம் ஏரிவேலுர், ஆவூர், உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளில் இருந்து பலர் மாற்று கட்சிகளில் இருந்து விலகி, கழகத்தில் தங்களை இணைத்துக்‍கொண்டனர். திருவாரூர் மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு எஸ்.காமராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00