திருச்சியில் அய்யன் பாசன வாய்க்காலில் தண்ணீர் வரும் முன்பு இடிந்த பாலத்தினை அகற்றி புதிய பாலம் கட்டித்தரக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Jul 20 2018 12:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி அருகே அய்யன் பாசன வாய்க்காலில் தண்ணீர் வரும் முன்பு இடிந்த பாலத்தினை அகற்றி புதிதாக பாலம் கட்டாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதற்கு எதிராக அப்பகுதி மக்‍கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் அய்யன்வாய்க்கால் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. பாலம் கட்டிய சில ஆண்டுகளிலேயே பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. இது குறித்து அப்போதைய பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கடந்தாண்டு 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாசனத்திற்காக அய்யன்வாய்க்காலில் தண்ணீர் திறந்த போது இநத பாலம் இடிந்து விழுந்தது. பாலத்தின் மேல் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் குழாய்கள் மற்றும் மின்சார வயர்கள் முற்றிலும் சேதமடைந்தது.

இதுகுறித்து பொதுபணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை உடைந்த பாலத்தை அகற்றவும் மீண்டும் புதிய பாலம் கட்டவும் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர் என்று அப்பகுதி மக்கள் குற்றாஞ்சாட்டியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00