அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில் பொதுமக்‍களுக்‍கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிக்‍கு அனுமதி மறுப்பது ஏன்? - காவல்துறைக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Jul 19 2018 5:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு, காவல்துறை அனுமதி மறுப்பது ஏன்? என, உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, தேரடி திடலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதிகோரி, மாவட்டக் கழகச் செயலாளர் திரு.S. காமராஜ், மன்னார்குடி, காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கும், மன்னார்குடி நகரக் காவல் ஆய்வாளருக்கும் மனு அனுப்பியிருந்தார்.

அதன் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வேறு தேதியில் அனுமதி கோரும்படி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், ஆகஸ்ட் 5-ம் தேதி, நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி திரு. காமராஜ் மீண்டும் மனு அளித்தார். அந்த மனுவும் காவல்துறையால் பரிசீலிக்கப்படாததால், இந்தத் தேதியிலாவது அனுமதி வழங்குமாறு, காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி, திரு. காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி திரு. T. ராஜா, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க எல்லா அரசியல் கட்சியினருக்கும் உரிமை உண்டு என்று தெரிவித்தார். அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு, காவல்துறை அனுமதி மறுப்பது ஏன்? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து, இந்த மனு தொடர்பாக, வரும் 23-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு, திருவாரூர் மாவட்ட காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00