மக்கள் சந்திப்பு பயணத்தில் டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு : கழகத்தினரும், பொதுமக்களும் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம்

Jun 22 2018 4:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பயணம் மேற்றகொண்டுள்ள கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்‍கு, செல்லும் இடமெங்கிலும் கழகத் தொண்டர்களும், நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். தமிழகத்தில் நடைபெறும் துரோக ஆட்சி விரைவில் வீட்டிற்கு அனுப்பப்படும் என அவர் தெரிவித்தார்.

நெல்லையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் திரு. டிடிவி தினகரன் குற்றாலத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு, தென்காசியில் கழகத் தொண்டர் மணிகண்டனின் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட கழக நிர்வாகிகள், கழகத்தின் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து மக்‍கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்ட திரு. டிடிவி தினகரனுக்‍கு கொடிக்‍குறிச்சி பகுதியில் கழகத்தின் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு சிவராமபேட்டை, இடைக்‍கால் ஆகிய இடங்களில் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆயிரக்‍கணக்‍கில் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து கடையநல்லூர் சென்ற கழக துணைப் பொதுச் செயலாளருக்‍கு செண்டைமேளம், பேண்டு வாத்தியம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது.

அங்கு ஆயிரக்‍கணக்‍கில் திரண்ட கழகத்தினர் மற்றும் பொதுமக்‍கள் மத்தியில் பேசிய திரு. டிடிவி தினகரன், தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் நல்லாட்சி அமையும் என உறுதிபடத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சொக்‍கம்பட்டி சென்ற கழக துணைப்பொதுச் செயலாளருக்‍கு அங்குள்ள கிராமமக்‍கள் ஒன்றுதிரண்டு வரவேற்பு அளித்தனர். அவர்கள் மத்தியில் பேசிய திரு. டிடிவி தினகரன், தமிழகத்தில் மீண்டும் அம்மா ஆட்சி அமைந்ததும் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்‍‍கான நலத்திட்டங்கள் அமல்படுத்தப்படும் எனக்‍ கூறினார்.

அதன்பிறகு அங்கிருந்து பயணத்தை தொடர்ந்த திரு. டிடிவி தினகரனுக்‍கு, புன்னையாபுரத்தில் பெண்கள் மலர்தூவி வரவேற்பு அளித்தனர். புளியங்குடி பகுதியில் பேண்டு வாத்தியக்‍ கருவிகளுடன் முழங்க வரவேற்பு அளிக்‍கப்பட்டது. பின்னர் அங்குள்ள காமராஜர் சிலைக்‍கு திரு. டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் மதுரையை நோக்‍கிய தனது மக்‍கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00