துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க கழகத்தை மென்மேலும் வலுப்படுத்தும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம்கள் : ஏராளமானோர் கழகத்தில் இணைந்தனர்

Jun 22 2018 12:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்படும் துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனின் ஆணைக்‍கிணங்க, கழகத்தை மென்மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய உறுப்பினர்களை சேர்க்‍கும் முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நாகை வடக்‍கு மாவட்டம் மயிலாடுதுறை வடக்‍கு ஒன்றியக்‍ கழகம் சார்பில் ஐவநல்லூரில் கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்‍கும் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், காளி, பூதங்குடி, ஐவநல்லூர், கடலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்‍கணக்‍கானோர் கழகத்தில் ஆர்வமுடன் இணைந்தனர். ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு புதிய உறுப்பினர்களுக்‍கு வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.

ஈரோடு மாநகர் மாவட்டக் கழகம் சார்பில் இன்று நடைபெற்ற ஆலோசனைக்‍ கூட்டத்தில், கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்த்து கழகத்தை மென்மேலும் வலுப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்டக்‍ கழகச் செயலாளர் பருவாச்சி திரு. எஸ்.பரணீதரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்‍கணக்‍கானோர் கழகத்தில் இணைந்தனர்.

திருச்சி வடக்‍கு மாவட்டக்‍ கழகம் சார்பில், மணிகண்டம், அலுந்தூர் உள்ளிட்ட கிராமங்களில் கழக உறுப்பினர் சேர்க்‍கை குறித்த ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது. திருச்சி வடக்‍கு மாவட்டக்‍ கழச் செயலாளர் திரு. ஆர். மனோகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00