வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்து போகச் செய்யும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்‍கு எதிராக சென்னையில் ரயில் மறியல் போராட்டம் - நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

Apr 21 2018 2:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்து போகச் செய்யும் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சென்னையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் இச்சட்ட திருத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், எஸ்.டி.பி.ஐ., மே-17 உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இச்சட்ட திருத்ததை உச்சநீதிமன்றம் திரும்பப் பெற வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, SC / ST அலுவலர் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ஆதி தமிழர் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். கோவை ரயிலை மறித்து போராட்டத்திய அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00