அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் கழக உறுப்பினர் சேர்க்கை முகாம் - இளைஞர்கள், பெண்கள், வணிகர்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் கழகத்தில் இணைந்தனர்

Apr 21 2018 10:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில் கழக உறுப்பினர் சேர்க்கை முகாம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் இளைஞர்கள், பெண்கள், வணிகர்கள், என ஏராளமானோர் ஆர்வமுடன் தங்களை கழகத்தில் இணைந்து வருகின்றனர்.

திருச்சி வடக்கு மாவட்ட கழகம், பொன்னம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட துவரங்குறிச்சி பகுதியில் கழக கொடியேற்று விழா மற்றும் கழக உறுப்பினர் சேர்க்கை முகாம், கழக அமைப்பு செயலாளர் திரு. ஆர்.மனோரகன் தலைமையில் நடைபெற்றது. இதில், கழக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று பொதுமக்கள், வணிகர்கள், இளைஞர்கள், பெண்களிடம் கழத்தின் கொள்கை, செயல்பாடுகளை எடுத்து கூறி உறுப்பினர் இணைத்து வருகின்றனர். இதில் திரளான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தலைமையில் வரும் 27ம் தேதி கண்டன ஆர்ப்பாடம் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கொள்ளிடம் ஒன்றியக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம், புத்தூரில் நடைபெற்றது. நாகை வடக்கு, மாவட்டக்கழக செயலாளர் திரு. எஸ்.செந்தமிழன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஒன்றியக்கழக செயலாளர், மற்றும் கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என திரளாக பங்கேற்றனர். கூட்டத்தில் திமுக, பாமக, ஈபிஎஸ்-ஓ.பி.எஸ் அணி ஆகியவற்றில் இருந்து விலகி நூற்றுக்‍கும் மேற்பட்டோர் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00