கழக விதிமுறைகளை மீறி இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்ஸுக்‍கு தேர்தல் ஆணையம், சின்னத்தையும், கட்சியின் பெயரையும் வழங்கியுள்ளதாக வழக்‍கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குற்றச்சாட்டு - கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா சார்பில் 7 லட்சம் ஆவணங்கள் தாக்‍கல் செய்யப்பட்டிருப்பதாக பேட்டி

Apr 20 2018 6:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

இரட்டை இலை சின்னம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது, கழக விதிமுறைகளை மீறி இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் செயல்பட்டதை ஆதாரத்துடன் எடுத்துரைத்தும், அதனை மீறி தேர்தல் ஆணையம், சின்னத்தையும், கட்சியின் பெயரையும் அவர்களுக்‍கு வழங்கியுள்ளதாக, கழகப் பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா மற்றும் துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் எம்.எல்.ஏ தரப்பிலான வாதத்தில் தெரிவிக்‍கப்பட்டது.

இரட்டை இலை சின்னத்தை இ.பி.எஸ்.ஸுக்‍கு தேர்தல் ஆணையம் ஒதுக்‍கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா சார்பில் வழக்‍கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்‍கு விசாரணை இன்று நடைபெற்றபோது, கழக விதிமுறைகளை மீறி இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் செயல்பட்டதை ஆதாரத்துடன் எடுத்துரைத்தும், அதனை மீறி தேர்தல் ஆணையம் சின்னத்தையும், கட்சியின் பெயரையும் அவர்களுக்‍கு வழங்கியுள்ளதாக, கழகப்பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா மற்றும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தரப்பிலான வாதத்தில் தெரிவிக்‍கப்பட்டது.

மேலும், ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஆவணங்களை மட்டுமே எடப்பாடி தரப்பினர் தாக்‍கல் செய்துள்ளதாகவும், தியாகத்தலைவி சின்னம்மா சார்பில் அடிப்படை உறுப்பினருக்‍கான ஆவணங்கள் 7 லட்சம் தாக்‍கல் செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்‍கறிஞர் திரு. ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.

இந்த வழக்‍கு விசாரணை வரும் 24-ம்​தேதிக்‍கு ஒத்திவைக்‍கப்பட்டுள்ளது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கழக செய்தித் தொடர்பாளர் திரு.புகழேந்தி, தமிழகத்தில் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் ஆட்சி எப்போது முடிவுக்‍குவரும் என மக்‍கள் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.





செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00