சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை - வெப்பம் தனிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

Jun 24 2017 10:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் கோடை காலம் முடிவடைந்த நிலையில், வெப்ப சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அடையார், கிண்டி, சைதாப்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், கே.கே. நகர், கோயம்பேடு, விமான நிலையம் போன்ற மாநகர் பகுதிகளிலும், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பம்மல் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது.

இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி, போரூர், ஆவடி, அம்பத்தூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக கோடை வெப்பத்தின் தாக்கம் தணிந்து குளிர்ச்சி சூழல் நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் நிரம்பி வருவதால், கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், மழையின் காரணமாக பூமியின் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் மலைத்தோட்ட காய்கறிகளை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல், கடும் வெயில் வாட்டி வந்த வேலூர் மாவட்டத்திலும் நேற்றிரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இரவு முழுவதும் தொடர்ந்து பெய்த மழையினால், வெப்பம் தனிந்து குளிர்ச்சியான தட்ப வெட்ப நிலை நிலவுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00