ராமநாதபுரத்தில் இ-சேவை மையங்கள் மூலம் ஸ்மார்ட் கார்டு விநியோகிக்கும் திட்டம் தொடங்கியது - நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அம்மா ஆரோக்கிய திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

Jun 24 2017 4:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரத்தில் இ-சேவை மையங்கள் மூலம் ஸ்மார்ட் கார்டு விநியோகிக்கும் திட்டம் தொடங்கியது.

ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திரு. நடராஜன் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு ஸ்மார்ட் கார்டுகளை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 17 நலவாரிய உறுப்பினர்களுக்கு இயற்கை மரண நிவாரன தொகையாக ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும், 23 பேருக்கு ஓய்வூதிய நல ஆணைகளையும் மாவட்ட ஆட்சியர் திரு. என். வெங்கடேஷ் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அம்மா ஆரோக்கிய திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் திருமதி. ஆசியா மரியம் தொடங்கி வைத்தார். மேலும் இத்திட்டத்தின் கீழ் இலவச பரிசோதனை மேற்கொண்ட பத்து பேருக்கு அடையாள அட்டைகளையும் அவர் வழங்கினார். அம்மா ஆரோக்கிய திட்டத்தின் மூலம் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அரசு மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ஒருமுறை அடிப்படை உடல் பரிசோதனையினை இலவசமாக செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லை அருகே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு, புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விவசாயிகள், குடிமராமத்து திட்டம், வண்டல் மண் எடுக்கும் திட்டம் போன்றவற்றை அறிமுகப்படுத்திய மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

இதேபோல், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில், வண்டல் மண் எடுக்க அனுமதி அளித்த தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

இதனிடையே, நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அரசு உதவி நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், திரை மூலம் அளிக்கப்படும் பயிற்சிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கு இனையாக தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த புதிய திட்டம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00