காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையில் பணியாற்றி வந்த 20 பேர் உயிரிழந்துள்ளதற்கு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவு

Feb 25 2017 7:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையில் பணியாற்றி வந்த 20 பேர் உயிரிழந்துள்ளதற்கு, முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த திரு. P. முனியாண்டி, புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கிராமத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த திரு. S. சந்தானகிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்தில் தீயணைப்பாளராக பணிபுரிந்து வந்த திரு. A. பருக்துல்லா உள்ளிட்ட 20 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் துயரம் அடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 20 காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ள முதலமைச்சர், அவர்களது குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00