தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் சென்னை மற்றும் பிற நகரங்களில் ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில் 50 ஆயிரம் குடியிருப்புகள் - தமிழக அரசு ஒப்புதல்

Feb 25 2017 8:02AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம், சென்னை மற்றும் பிற நகரங்களில், ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில், 50 ஆயிரம் குடியிருப்புகள் கட்டுவதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த ஐந்தாண்டுகளில் சென்னை மற்றும் பிற நகரங்களில் பல்வேறு திட்டங்களின்கீழ், 59 ஆயிரத்து 23 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் தனிவீடுகளை தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் கட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில், 50 ஆயிரம் குடியிருப்புகள் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தனி வீடு ஒவ்வொன்றும், 300 சதுர அடி தரைப் பரப்பளவில் பயனாளிகள் தாங்களாகவே கட்டிக் கொள்ள வழிவகை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 945 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஒவ்வென்றும் 400 சதுர அடி கட்டடப் பரப்பில், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, பால்கனி உள்ளிட்டவற்றைக் கொண்டதாக அமையும் என்றும் இவ்வீடுகள் அனைத்திற்கும் மின் மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00