தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அரசால் பறிபோன ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுக்க மாணவச் செல்வங்கள், இளைஞர்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வருவதாக சின்னம்மா பெருமிதம் : பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அகிம்சை வழியில் போராடும் இளைஞர்கள் உலகத்திற்கே வழிகாட்டியாக திகழ்வதாகவும் பாராட்டு

Jan 20 2017 11:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அரசால் பறிபோன ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுக்க, மாணவச் செல்வங்கள் மற்றும் இளைஞர்கள் அமைதி வழியில் அறப்போராட்டம் நடத்தி வருவதாக அ.இஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் சின்னம்மா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறாக அமைந்துவிடக்கூடாது என்ற பொறுப்புணர்வோடு அஹிம்சா நெறியில் போராட்டம் மேற்கொண்டுள்ள மாணவச் செல்வங்களும், இளைஞர்களும் உலகத்துக்கே வழிகாட்டும் உயரியவர்களாகத் திகழ்வதாகவும் சின்னம்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கையில், தமிழர்தம் கலாச்சார பண்பாட்டுப் பெருமைகளின் அடையாளமான ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து ஓர் அவசர சட்டத்தைக் கொண்டுவந்து, ஜல்லிக்கட்டுக்கான தடையை முழுவதுமாக நீக்க வேண்டும் என்கிற கோரிக்கையை அ.இ.அ.தி.மு.க.வும், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி "அம்மா"வின் வழித்தடத்தில் நடக்கும் தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமுகமாக குரல் எழுப்பி வருகின்றன என தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கான தடையை உச்சநீதிமன்றம் வழங்குவதற்குக் காரணமாக அமைந்தது திமுக அங்கம் வகித்த முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி தான் என்பதையும் வரலாறு அறியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசால் அன்று பறிபோன ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுக்க இன்று போராடி வரும் தமிழக மக்களின் கொதிநிலை கொண்ட அதே மனநிலையில்தான் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களைக் கொண்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் சரி, புரட்சித் தலைவி அம்மாவின் வழித்தடத்தில் நடக்கும் தமிழக அரசும் சரி, ஒருமித்த கருத்தையே கொண்டிருக்கிறது என சின்னம்மாதெரிவித்துள்ளார்.

உலக அரங்கில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலும் குறிப்பாக, திராவிட அரசியலில் மாபெரும் வரலாற்றுப் புரட்சிகளுக்கெல்லாம் வாய்க்கால் வகுத்த பெருமை மாணவச் செல்வங்களின் எழுச்சிக்கும், புரட்சிக்கும் உண்டு- தன்னெழுச்சியாக உருவாகி இருக்கும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறாகவோ, குந்தகத்தை ஏற்படுத்தும் வகையிலோ அமைந்துவிடக் கூடாது என்ற பொறுப்புணர்வோடு தங்களின் ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் அமைதி வழியில், அகிம்சா நெறியில் முன்னெடுத்து வரும் மாணவச் செல்வங்களும், இளைஞர்களும் உலகத்துக்கே வழிகாட்டும் உயரியவர்களாகத் திகழ்வதை பாராட்டித்தான் ஆக வேண்டும் என சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், மாணவச் செல்வங்களின் கல்வி, இளைஞர்களின் வேலை வாய்ப்பு, ஏழை, எளிய குடும்பங்களின் பொருளாதார பின்புலம் இவற்றில் எத்தகைய இடர்களும், இடையூறுகளும் இப்போராட்டங்களால் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், புரட்சித் தலைவி அம்மாவின் தமிழக அரசும், மத்திய அரசிடம் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்குவதற்கு மிக உறுதியான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது-

இவை அனைத்திற்கும் மேலாக, மாணவச் செல்வங்கள், இளைஞர்கள் உள்ளிட்ட தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடரில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை முற்றிலுமாக நீக்கிடக் கோரும் தீர்மானத்தை முன்மொழியவும், அதனை அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த குரலால் நிறைவேற்றவும் வலியுறுத்துவோம் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்வதாகவும் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

அந்நிய நாட்டில் உருவான அமைப்பாகிய, "பீட்டா" தமிழ்நாட்டின் கலாச்சார பெருமைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதை முற்றிலும் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் சட்டரீதியாக மேற்கொள்ளப்படும் என்றும், கழகப்பொதுச்செயலாளர் சின்னம்மா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00