முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி : இந்திய அரசியலில் மிகப்பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி வேதனை

Dec 6 2016 9:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மறைவுச் செய்தி அறிந்ததும் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, மத்திய அரசு சார்பில் அமைச்சர் திரு. வெங்கய்யா நாயுடு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். சென்னை ராஜாஜி ஹாலில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உடல் அருகிலேயே நீண்ட நேரம் இருந்தார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் இன்று பிற்பகலில் சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம், சென்னை கடற்கரையில் உள்ள ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளத்திற்கு வந்த பிரதமர், அங்கிருந்து கார் மூலம் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்கத்திற்கு சென்றார். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தமிழக அமைச்சர்கள், அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பிரதமர் ஆறுதல் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00