அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லிதோப்பு தொகுதிகளுக்கான தேர்தல் - அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் -

Oct 28 2016 8:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க, அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதிகளில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள், தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் நவம்பர் மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர்கள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க இன்று தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அதன்படி, அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் திரு. வி.செந்தில் பாலாஜி, தேர்தல் நடத்தும் அலுவலர் திரு. சைபுதீனிடம், வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தஞ்சாவூர் தொகுதி கழக வேட்பாளர் திரு. எம்.ரெங்கசாமி, தஞ்சை ரயிலடியில் உள்ள கழக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர். சிலைக்கும், பழைய பேருந்து நிலையம் அருகேவுள்ள அண்ணா சிலைக்கு மாலைகள் அணிவித்த பின்னர், தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில், தொகுதிக்கான தேர்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான திரு. C. சுரேஷிடம், வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

திருப்பரங்குன்றம் தொகுதி கழக வேட்பாளர் திரு. ஏ.கே. போஸ் தனது வேட்பு மனுவை, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.

புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியில், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. ஓம்சக்தி சேகர் தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் திரு. மலர் கண்ணனிடம் தாக்கல் செய்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00